search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டி மழை"

    வடகிழக்கு பருவ மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பூண்டி ஒன்றியத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. #rain #Poondirain

    ஊத்துக்கோட்டை:

    வடகிழக்கு பருவ மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பூண்டி ஒன்றியத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பலத்த மழை பெய்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வந்தால் சேதம் அடையும் கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு சீர்படுத்துவது வழக்கம். இதற்காக பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளா கத்தில் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி நடந்து வரு கிறது.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்க டேசன் கூறும்போது, “கடந்த 15 நாட்களாக பூண்டி ஒன்றி யத்தில் சாலை ஓரங் களில், தாழ்வான பகுதி களில் தேங்கும் மழை நீரால் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடர் தெளித்து வருகிறோம். டெங்கு கொசுக்களை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் தனி அறை செயல்பட்டு வருகிறது” என்றார். #rain #Poondirain

    ×